அன்னை தெரேசா
Anna Thai
,
irakam
,
karunai
,
kiristhuvin anbu
,
kolkotta
,
Mother Teresa
,
paasam
,
parivu
,
tamil
,
விளக்கங்கள்
ராசி பலன் மற்றும் ஜாதகம் கைரேகை ஜோசியம் கவனிக்கவும்
anchanam
,
arulvaaku
,
jakamaa
,
kairekai
,
kethu
,
korisoluthal
,
Malayalam manthirikam
,
manthirikam
,
nadusaamam
,
pilisuniyam
,
rahu
,
Saathakam
,
sank
,
seivinai
,
sevaai
,
vaaku
,
விளக்கங்கள்
ராசி பலன் மற்றும் ஜாதகம் கைரேகை ஜோசியம் பார்ப்பது போன்ற காரியங்கள் இன்று நேற்று அல்ல, அது ஆதி காலத்தில் இருந்தே வைத்திருக்கிறது என்பதை அறியமுடியும். பெரும்பாலான மன்னர்கள் தங்கள் அரசவையிலேயே (குடும்ப வக்கீல் குடும்ப டாக்டர் போல) அரசவை ஆஸ்த்தான ஜோதிடர்களையும் சாஸ்திரிகளையும் குறி சொல்பவர்களையும் வைத்திருந்திருக்கிறார்கள் எனபதை மன்னர் காலவரலாறுகளின் மூலம் அறியமுடியும்.
பார்வோனின் காலத்தில் எகிப்த்திலும் ஜோஷ்யர்களும் சாஸ்த்திரிகளும் மந்திர வாதிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் "ஒரு சாதாரண கோலை சர்ப்பமாக மாற்றும் அளவுக்கு திறமை பெற்றிருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
யாத் 7:11. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.12 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின;
ராஜாதி ராஜாக்கள் அரசாண்ட பாபிலோன் தேசத்திலும் ஜோசியர்கள் சாஸ்த்திரிகளும இருந்திருக்கிறார்கள் என்பதையும் ராஜாவானவர் தேவையான நேரங்களில் அவர்களை அழைத்தனுப்பி ஆலோசனைபெற்றார் என்பதையும் அதன்அடிப்படையிலேயே ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் தான் கண்ட சொப்பனத்துக்கு பொருளறிய சாச்த்திரிகளையும்/ஜோஷியரையும் அழைத்தனுப்பினார் என்பதையும் கீழ்கண்ட வசனங்கள் மூலம் அறியமுடிகிறது.
தானியேல் 2:2 அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும் பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
அதேபோல் கர்த்தரின் ஜனங்களாகிய இஸ்ரவேல் தேசத்திலும் அநேகர் நாள் நட்சத்திரம் பார்க்கிரவர்களாகவும் அமாவாசி கணிப்பவர்களாகவும் இருந்திருக் கிறார்கள் என்பதை கீழ்கண்ட கர்த்தரின் கடிந்துகொள்ளுதல் மூலம் அறிய முடிகிறது
ஏசாயா 47:13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.
இவ்வாறு ஆதி காலம் தொட்டு அநேகரால் நம்பபட்டு வருவதும் இன்றும் அனேக ஜனங்களால் நம்பபடுவதும் பல பத்திரிக்கைகளில் தவறாமல் பிரசுரிக்கபட்டு, படித்தவர்கள் கூட அந்த ராசிபலனை பர்த்திவிட்டே சில காரியங்களை செய்யுமளவுக்கு மக்கள் மனதில் பதிந்துவிட்டதுமாகிய ராசி மற்றும் ஜோசியம் கணிப்பு முற்றிலும் பொய் என்றோ தவறு என்றோ யாராலும் கூறிவிடமுடியாது என்றே கருதுகிறேன்.
காரணம் நமது வேதாகமத்திலேயே ஸ்திரீகள் அஞ்சனம் பார்த்தும், குறி சொல்லியும் கணித்து சொல்லப்பட இரண்டு சம்பவங்கள் உண்மையாகவே இருந்திருக்கின்றன.
யுத்த நேரத்தில் ஒரு ஸ்திரி சவுலுக்கு அஞ்சனம் பார்த்து சாமுவேல் மூலம் சொல்லப்பட்ட வார்த்தைகள் அப்படியே நிறைவேறின
I சாமுவேல் 28:19 கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
அதேபோல் பவுல் சுவிசேஷம் சொல்லிவந்த காலகட்டங்களில் அவருக்கு எதிர்ப் பட்ட குறிசொல்லும் ஆவியையுடைய ஒரு ஸ்திரி:
அப்போஸ்தலர் 16:16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
17. அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.
அவள் குறிப்பார்த்து சத்தமிட்டுசொன்ன வார்த்தைகள் உண்மையாகவே இருந்தன.
எல்லாவற்றிக்கும் மேலாக நமதாண்டவராகிய இயேசுவின் பிறப்பையும் அவர் பிறக்க போகும் இடத்தையும் இதுபோன்ற சாஸ்த்திரிகள் அவரின் நட்சத்திரம் உதித்ததை வைத்து முன்னமேயே கணித்து அவர் யூதருக்கு ராஜாவேன்பதை முன்னமேஅறிந்து அவரை பணிந்துகொள்ளவந்தார்கள் என்று வேதம் சொல்கிறது.
மத்தேயு 2:2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
இதன் அடிப்படையில் பார்த்தால் கர்த்தரின் வார்த்தையை கேட்டு அதை ஜனங்களுக்கு சொல்லி முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி என்னும் ஞான திருஷ்டிகாரன் ஒருவகை என்றால், தேவனின் நியமணகளையும் அவர் வானத்து ராசிகளை கையாளும் விதத்தையும் ஆராய்ந்து அதன் மூலம், எது எங்கு எப்படி நடக்கும் என்பதை முன்னமே அறிந்துகொள்ளும் சாஸ்த்திரம்பார்த்தால் என்பது இன்னொரு நிலை என்பதை அறிந்துகொள்ளமுடியும்!
இவ்வாறு ஜோசியம் பார்த்து குறி சொல்லி சாஸ்த்திரங்கள் பார்த்து கண்டறியபட்ட அனேககாரியங்கள் சரியாகவே நிறைவேறினாலும் நமதுஆண்டவர் இகாரியங்களை செய்யகூடாது என்று பல வசனங்கள் மூலம் திடமாககட்ட்டளையிட்டுள்ளார்:
லேவியராகமம் 19:26 குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
லேவியராகமம் 19:31 அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
உபாகமம் 18:10 தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப் பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், 11. மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.
எல்லாவற்றிக்கும் மேலாக:
லேவியராகமம் 20:27 அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
இவ்வாறு குறிசொல்கிறவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்கிற அளவுக்கு கடுமையான கட்டளையை தேவன் கொடுத்துள்ளார் என்றால், அதில்
ஏதோ நமது கண்களுக்கு மறைவான மிகப்பெரிய தவறு ஒளிந்திருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன்......
ற்ற மதத்தினவர்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களும் கூட இப்படிப்பட்ட காரியங்களை செய்கிறார்கள் என்பதை பார்க்கும்போது சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது.
லேவியராகமம் 19:31 அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
வசனம் செய்யாதிருங்கள் என்று ஒரு காரியத்தை சொன்னால் அதை செய்யாதிருப்பதுதான் நல்லது.
நாம் மீறி செய்தால் அதற்கு பொறுப்பு முழுவதும் நாமாகத்தான் இருக்கமுடியுமே தவிர வேறு யாரோ அல்ல....
இன்றைய காலகட்டத்தில் தன் மகனுக்கோ / மகளுக்கோ திருமணம் என்றதும் எல்லாரும் நல்ல நாளை பார்கிறார்கள்.
இன்னும் ஒருசிலர் மறைமுகமாக ஜாதகத்தையும் பார்கிறார்கள் அதுமாதிரமல்லாமல் செய்வினை / ஏவல் என்று பல காரியங்களுக்காக தேவன் செய்யகொடாது என்று சொன்ன காரியங்களை எல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
லேவியராகமம் 19:26 குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
யாரோ சொல்லுகிறதை நம்புகிறவர்கள் ஏன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதை நம்பகூடாது.......
எரேமியா 33 : 3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
அது எனவோ தெரியவில்லை கர்த்தரை நோக்கி கூபிடுவதைபார்கிலும் மற்ற மனிதர்களை தேடுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.
நீதிமொழிகள் 27 : 1
நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
இன்னொரு மனுஷன் சொல்லுவதை மனிதன் நம்புகிறான். நான் சொல்கிறேன் அந்த மனுசனையே உண்டாகின தேவன் சொல்கிறதை நம்புவதே சிறந்தது என்று.
சங்கீதம் 118 :8 மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்http://lord.activeboard.com/t43933707/topic-43933707/
Social Net work Facebook,twitter
echarikai
,
Fb
,
ill am penkal
,
kaamam
,
kaamugar
,
kaathal
,
koddaram
,
kolai
,
mobile
,
number
,
police
,
saith an
,
samuga valai
,
tarkolai
,
விளக்கங்கள்
Subscribe to:
Posts
(
Atom
)